Posts

Showing posts from November, 2010

Green Zone - பச்சைவனமும் பாலைவனமும் ....

Image
இல்லாத பேரழிவு ஆயுதங்களைத் தேட நியமிக்கப்பட்டு இருக்கும் அமெரிக்க ராணுவ குழு ஒன்றின் தலைவன் ராய் மில்லர்.தனக்கு கொடுக்கப்படும் தகவல்களை நம்பி,தனது உயிரையும் தனது குழு ஆட்களது உயிரையும் பணயம் வைத்து,ஆயுதங்களை தேடும் வீரன்.தொடர்ச்சியாக தான் செல்லும் இடங்களில் எல்லாம் எந்த ஒரு ஆயுதமும் கிடைக்காமல் போக,தனக்கு கொடுக்கப்படும் தகவல்களை சந்தேகப்படுகிறான். ஆனால்,மேலிடத்தில் தகவல்களின் நம்பகத்தன்மை பற்றி அவன் கேள்வி எழுப்பும் போது, எப்போதும் ஒலிக்கும் அதிகாரத்தின் ஆணவக்குரல் அவனை அடக்க முயல்கிறது.கொடுக்கப்படும் தகவல்களைக் கொண்டு,அவனுக்கு அளிக்கப்படும் வேலைகளை செய்வது மட்டுமே அவனது பணி என்றும்,அதன் ஸ்திரத்தன்மை பற்றிய ஆராய்ச்சி அவனது வேலை இல்லை என்றும் கூறப்படுகிறது. உடனிருக்கும் வீரர்களின் மனோநிலையும்,கொடுத்த வேலையை செய்துவிட்டு சீக்கிரம் உயிரோடு ஊர் போய் சேர வேண்டும் என்பதாக இருக்கும்போது,பல உயிர்களை பணயம் வைத்து,பற்பல சேதங்களுக்கும் அடிகோலிய ஆதார தகவலான பேரழிவு ஆயுதங்களின் இருப்பு குறித்த உண்மையை கண்டறிய வேட்கை கொண்டு அலைகிறான். இந்நிலையில் இவனது மனக்குமுறல்களை நேரில் காணும் CIA ஏஜெ

Ice station – அதிரடி ஸ்டேஷன்…

Image
2000த்துல Matthew Reilly எழுதின புக் இந்த Ice station.கதை என்னன்னா,அண்டார்டிகாவின் அமெரிக்க ஆராய்ச்சி மையத்துல(Ice station) இருக்குற ஒரு விஞ்ஞானி,ஒரு அதிசயமான விசயத்தை கண்டுபிடிக்குறாரு.அதாகப்பட்டது,அடியிலேயே இருக்கிற பனிக் கடல்ல, கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் அடில இருக்குற ஒரு பெரிய குகைல, விமானம் மாதிரியான ஒரு கலம் இருக்கிறதை கண்டுபிடிக்குறார். அந்த கலத்தை சுத்தி இருக்கிற பனிக்கு மட்டுமே வயசு,400 மில்லியன் ஆண்டுகள்! இதை உடனே ரேடியோல transmit பண்ண,விறைக்க வைக்கிற குளிர்லையும் பரபரனு பத்திக்குது அண்டார்டிகா.அமெரிக்கா உடனே பன்னிரண்டு பேர் கொண்ட ஒரு அதிரடி டீம (Marines) அனுப்புது , இடத்தை பாதுகாப்பா வச்சுக்கவும்,வேற யாரும் அந்த கலத்தை கடத்திட்டு போயிடாம இருக்கவும். இந்த டீமோட தலைவன் ஷேன் ஷோபீல்ட்க்கு(ஹீரோனு சொல்லவும் செய்யனுமா? J ) சனியன் overtimeல ரிவிட் அடிக்குது.அந்த மையத்தை கைபற்ற வரும் எதிரி மற்றும் தோழமை நாடுகளின் வீரர்கள்,அந்த ஸ்டேஷன்லேயே இருக்கிற உள் சண்டைகள்,கொலைகள்,கடல்ல இருக்கிற சுறா மீன்கள்,தன்னுடைய டீம்லேயே இருக்கிற புல்லுருவிகள்னு எங்க திரும்பினாலும் அபாயம்.

The Chimpanzee complex -கனவுகள்,ஏக்கங்கள்,இழப்புகள்…

Image
நெடுநாட்கள் கழித்து ஒரு காமிக்ஸ் பதிவோடு சந்திப்பதில் மகிழ்ச்சி நண்பர்களே!அடுத்ததும் காமிக்ஸ் பதிவே என்ற நற்செய்தியோடு(?!) பதிவிற்குள் செல்வோம். ======================================================================   2035.... இந்தியப் பெருங்கடலில் அமைதியாய் தன் வழியே சென்று கொண்டிருக்கும் ஒரு யு.எஸ் போர்க் கப்பலுக்கு வருகிறது ஒரு செய்தி.அவர்களின் பாதைக்கு அருகே விண்ணில் இருந்து விழ இருக்கும் ஏதோ ஒரு மர்மப் பொருளை தேடிச் சென்று அது என்னவென்று காணும் பணி தான் அது. தேடிச் செல்வது ஒரு ஏவுகனையாக இருக்கக் கூடாது என்று மனதில் பிரார்த்தனை செய்தவாறே  நெஞ்சில் கிலியுடன் செல்கிறார்கள் கப்பல் மாலுமிகள். சுற்றிலும் சலனமே இல்லாத கடல் சூழ்ந்து இருக்க, சலனமான மனதோடு முகம் தெரியாத ஆபத்தை நோக்கி செல்கிறார்கள் அவர்கள். ஆனால்,அவர்கள் பயந்தது போல அது ஒரு ஏவுகணை அல்ல.வீரர்களின் தங்கள் உயிருக்கு ஆபத்தில்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.ஆனால்,அவர்கள் கண்டெடுத்த கலம்,உலகத்திற்கும்,அதன் மக்களுக்கும்,அவர்களுக்கு தெரிந்ததாய் இருக்கும் அறிவிற்கும் பெரும் சவாலையும்,விடை காண முடியாத ஒரு